Airtel Freedom Packs இல் உள்ள சிக்கல்கள்

இலங்கையில் புதிதாக Freedom Packs யை ஏர்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பழைய Package களை நீக்கி, 4G தொழில் நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த Package களைப் பயன்படுத்துவதில் ஒரு புதிய சிக்கல் நிலைமை Airtel பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னர் Reload/Recharge செய்தால் நமது கணக்கின் நிலுவை அதிக காலத்திற்குச் செல்லுபடியாகும் விதத்தில் Airtel அதனை முகாமைத்துவம் செய்துவந்தது. இதன் காரணமாக தமது இரண்டாவது SIM ஆக Airtel யைப் பலர் பயன்படுத்தி வந்தனர். அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் சலுகை விலையிலான Internet Data Packages ஆகும். விரும்பிய நேரத்திற்கு விரும்பிய Package யைச் செயற்படுத்தக் கூடியதாக இருந்த அதே வேளை, Reload/Recharge செய்யப்பட்ட நமது பணம் அவர்களின் கணக்கில் நிலுவையாக அதிக காலம் வைத்திருக்கக் கூடியதாக இருந்தது.

ஆனால் Freedom Packs அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கணக்கு நிலுவையின்(Account Balance) காலம்(Expiry Date​) குறைக்கப்பட்டுள்ளது. 4G Data Top-Up இற்கு அவர்கள் காலக்கெடு கொடுக்காமல் “கணக்கு செயற்பாட்டில் இருக்கும் வரையில்” என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டதன் விளைவாகக் கூட இது இருக்கும். இதன் காரணமாக நாம் Reload/Recharge செய்தால் Account Balance இன் Expiry Date​ வழமை போல அதிகரிக்காது. அவர்களின் Freedom Packs இல் குறைந்த்து. 48 ரூபாவின் Package யை செயற்படுத்தினால் தான் 15 நாட்களுக்காவது Connection Active ஆக இருக்கும். 15 நாட்கள் கடந்த பின்னர் Reload/Recharge செய்யாவிட்டால், நம்மால் எந்த அழைப்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். Incoming Calls, and Messages யை மாத்திரமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். Account Balance உம் காலாவதியாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் பாவிக்கிறீங்களோ! இல்லையோ! அவர்களின் ஒரு Package யை செயற்படுத்தியே ஆக வேண்டும் என்று நம்மை அவர்கள் நிர்ப்பந்தித்துள்ளது போல தெரிகிறது.

இது யாருக்குப் பிரச்சனையான விடையம்? Airtel யை தமது Internet Data தேவைகளுக்காக “மாத்திரம்” பாவிப்பவர்களுக்கு இது பிரச்சனையாகும். மற்றும்படி இந்த Freedom Packs ஆனது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தெரிவாகும்.

தெருவில் விற்கும் SIMs களை ஏன் வாங்கக் கூடாது?

தெருவுக்குத் தெரு, அல்லது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் Mobile Network கம்பெனிகளின் ஊழியர்கள் குடைகளைப் போட்டு ஒரு நடமாடும் SIM விற்பனை செய்யும் நிலையம் அமைத்து வர்றவங்க போறவங்களை வம்படியாகக் கூப்பிட்டு SIM விற்பார்கள்.

இவ்வாறான விற்பனையாளர்களிடம் இருந்து SIM வாங்கலாமா? இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் விற்பது ஏற்கனவே இன்னொரு நபரால் பாவிக்கப்பட்டு கைவிடப்பட்ட SIM அட்டைகளை, அவர் பாவிக்காது விட்டு 6 மாதங்கள் கடந்ததும், அந்த நபரின் அனுமதியில்லாமலேயே, அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துகின்றனர்.

அவர்கள் SIM களை மீள் சுழற்சிக்கு(Recycle) உட்படுத்தும் போது அவர்களது Servers களில் உள்ள தரவுகளை மாத்திரமே நீக்குகின்றனர். அந்த நபர், அந்த SIM அட்டையின் Mobile Number யை வைத்து இணையத்தளங்களிலும், Messaging Apps களிலும் செய்த நடவடிக்கைகளை, அதனால் ஏற்பட்ட விளைவுகளை அவர்கள் நீக்குவதில்லை.

சில வேளைகளில் அந்த நபர் தனது பேஸ்புக் கணக்கையோ அல்லது கூகுள், ட்விட்டர் கணக்கையோ Verification செய்வதற்காக அந்த Mobile Number யைப் பயன்படுத்தியிருந்தால், அதனை நாம் Verification செய்யப் பயன்படுத்த முடியாது. அதே நேரம் சில வேளை அந்த Mobile Number யை வைத்து அவரின் பேஸ்புக் கணக்கைக் கூடத் திறக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க எப்போதும் பழைய, பாவித்த Mobile Number களை வாங்க வேண்டாம். SIM வாங்கும் போது அது Recycle செய்யப்பட்ட SIM மா? அல்லது புதிய SIM மா? என்பதைக் கேட்டு வாங்கவும்.

குறிப்பு: நீங்கள் உங்களிடம் உள்ள ஒரு Mobile Number யைப் பாவிப்பதை நிறுத்துவதாயின் அதனை கழட்டி உடைத்தெறிவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புபட்ட உங்கள் சமூக வலைத்தளக் கணக்குகளை அதன் தொடர்பில் இருந்து நீக்க மறக்க வேண்டாம். அதே நேரம் Proper ஆக அதனை Deactivate செய்யவும். SIM யைக் கழட்டி தெருவில் வீச வேண்டாம். கண்டெடுத்தவர் அதனைத் தவறாகப் பாவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Private or Personal Chat செய்வதற்கு மிகவும் உகந்த Messaging App எது?

Messaging Apps என Whatsapp, Telegram, Messenger, Singal, Viber, IMO போன்ற செயலிகளைக் கூறலாம். இவற்றுள் Whatsapp மற்றும் Messenger செயலிகள் Facebook நிறுவனத்திற்குச் சொந்தமானவை. அதன் காரணமாகவே அவற்றின் Privacy(இரகசியம், தனியுரிமை, எதையெல்லாம் அவை நம்மைப்பற்றி தகவல் சேகரிக்கலாம்) குறித்த மிகப்பெரிய கேள்விக்குறி நம்முன்னே தோன்றக் கூடும்.

உண்மை தான், நாம் Messenger App இல் யார் கூட பேசுறம், என்ன பேசுறம் என்பதை அவதானித்து, அது தொடர்பான விளம்பரங்களை Facebook தனது Users இற்குக் காண்பிக்கும். இந்த ஒரு விஷயமே போதும் அந்தரங்கமான Personal Chats, Private Chats மேற்கொள்ள Facebook இனது Messaging Apps இனைத் தெரிவு செய்வது முட்டாள்தனம் என்று.

எங்கு எல்லாம் விளம்பரங்களை உங்களால் காணக் கூடியதாக உள்ளதோ அங்கெல்லாம் உங்களுக்கு Privacy இருக்காது எனக் கருதலாம். அதன் அடிப்படையில் தற்போதைய நிலைமையில் Telegram, Singal ஆகிய Messaging Apps உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கான Personal Chats, Private Chats மேற்கொள்ள உகந்த Messaging Apps ஆகக் கருதப்படுகிறது.