5G ஸ்மார்ட்போன் வாங்க இது சிறந்த தருணமா?

புதுசு புதுசா சந்தையில ஸ்மார்ட்போன் தினமும் வந்து இறங்கிக் கொண்டே தான் இருக்கு. அதன் வரிசையில் புதிய வரவுகள் தான் இந்த 5G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள். தற்சமயம் 4G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை விட விலை அதிகமாக இருந்தாலும் வாங்கலாமா? இது இன்றையை மிகப்பெரும் கேள்விக்குறியாகும்.

iPhone போன்ற விலை அதிகமான ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இதைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. ஆனால் இந்த Low-Budget/Mid-Range ஸ்மார்ட்போன்களை வாங்கும் நபர்கள் இது குறித்து சற்று சிந்தித்து வாங்குவது நல்லது தான்.

நம்ம நாட்டுக்கு இப்போதைக்கு 5G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் அவசியமா? என்றால் “இல்லை” என்பதே எனது பதில். அதற்குக் காரணம். இன்னமும் 4G யே எல்லா மூலைகளுக்கும் போய்ச்சேரவில்லை இதில இப்பவே 5G யைக் கையில தூக்கினா நியாயமா? அதுவும் Low-Budget/Mid-Range ல 5G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை இப்போதைக்கு வாங்க நினைப்பதே தவறு. பெயரு மட்டும் வச்சா பத்துமா? சோறு வைக்க வேணாமான்ற மாதிரி தான் இந்த தொழில்நுட்பங்களின் வருகையும். Intitial பிரச்சனை வரக் கூடாதுன்னு ஒவ்வொரு Network இக்கும் பெயருக்கு சில இடங்களில் 5G சேவையை ஆரம்பிப்பர். அவர்களை நம்பி இப்பவே நீங்க 5G யைக் கையில தூக்கினா, உங்களுக்குத் தான் நஷ்டம். உங்க ஏரியால 5G சேவையை ஆரம்பிக்கும் போது உங்க ஸ்மார்ட்போன் ஒழுங்கா வேலை செய்யுமான்னு கூட சொல்ல முடியாது.

அதற்காக இந்தக்காலத்தில விலை கம்மியாக கிடைக்கிறதே என்று போய் 3G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உங்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஏமாற அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே நீங்கள் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்குவதாக இருந்தால் 4G இக்குக் குறையவும் வேண்டாம், 4G இக்குக் கூடவும் வேண்டாம். வெறும் 4G மட்டும் போதும்.