ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் ஏன் வாங்கக்கூடாது?

நம்ம டீவி வாங்கிறது இரண்டு வருஷத்துக்கு ஒருக்கா டீவியை மாத்திற மாதிரியா? இல்லைல? அப்புறம் எதுக்கு ஸ்மார் டீவி வாங்க ஆசைப்படுறீங்க? Salesman ஆயிரம் சொல்லுவான், ஆனால் ஸ்மார்ட் தொலைகாட்சிகளை வைத்துக் குப்பை கொட்ட முடியாது. இணையத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கும் தொலைக்காட்சிகள், Android இயங்குதளத்துடன் இயங்கும் தொலைக்காட்சிகளை நீண்ட காலம் பாவிக்க முடியாது. அவற்றின் இயங்குதளம் காலாவதியானால் பிறகு Updates வராது. அவை கிட்டத்தட்ட கணனிகள் போலவே செயற்படுவதால் சீக்கிரம் பழுதடையவும் வாய்ப்புகள் உள்ளது.

அப்ப ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை வாங்கவே கூடாதா? அப்படி சொல்லல. சாதாரண LED தொலைக்காட்சிகளை வாங்கி, அவற்றிற்கு உங்கள் வசதிக்கு, தேவைக்கு ஏற்ப Smart TV/Android TV Box/Android Smart Tv ஒன்றை வாங்கிப் பொருத்தி விடுங்கள். டீவிக்கு டீவியும் ஆச்சு, அதுக்கு இந்த மாதிரி Box பொருத்தினால் அது ஆண்ராயிடு டீவியும் ஆச்சு. காலம் மாறும் போது தேவையென்றால் Box யை மாத்திரம் மாத்தலாம். பணமும் மிச்சம்.

அதை விட முக்கியமான ஒன்னு! Smart TV அல்லது Smart TV Box பொருத்தினால் கூட உங்க வீட்டில தமிழ் டீவி சீரியல் தான் போகப் போகுது, அப்புறம் எதுக்கு வீண் செலவு? Amazon Prime, Netflix போன்ற OTT Platforms களை நம்பியும் Smart TV வாங்க முடியாது. எவன் எப்ப கடைய சாத்துவான்னு சொல்ல முடியாது. ஆகவே டீவி வாங்கும் போது சாதாரண டீவி வாங்கவும். தேவைனா Smart TV பொருத்தி அதனையே Smart TV யாக மாற்றி விடலாம்.