தெருவில் விற்கும் SIMs களை ஏன் வாங்கக் கூடாது?

தெருவுக்குத் தெரு, அல்லது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் Mobile Network கம்பெனிகளின் ஊழியர்கள் குடைகளைப் போட்டு ஒரு நடமாடும் SIM விற்பனை செய்யும் நிலையம் அமைத்து வர்றவங்க போறவங்களை வம்படியாகக் கூப்பிட்டு SIM விற்பார்கள்.

இவ்வாறான விற்பனையாளர்களிடம் இருந்து SIM வாங்கலாமா? இல்லை. அதற்குக் காரணம் அவர்கள் விற்பது ஏற்கனவே இன்னொரு நபரால் பாவிக்கப்பட்டு கைவிடப்பட்ட SIM அட்டைகளை, அவர் பாவிக்காது விட்டு 6 மாதங்கள் கடந்ததும், அந்த நபரின் அனுமதியில்லாமலேயே, அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துகின்றனர்.

அவர்கள் SIM களை மீள் சுழற்சிக்கு(Recycle) உட்படுத்தும் போது அவர்களது Servers களில் உள்ள தரவுகளை மாத்திரமே நீக்குகின்றனர். அந்த நபர், அந்த SIM அட்டையின் Mobile Number யை வைத்து இணையத்தளங்களிலும், Messaging Apps களிலும் செய்த நடவடிக்கைகளை, அதனால் ஏற்பட்ட விளைவுகளை அவர்கள் நீக்குவதில்லை.

சில வேளைகளில் அந்த நபர் தனது பேஸ்புக் கணக்கையோ அல்லது கூகுள், ட்விட்டர் கணக்கையோ Verification செய்வதற்காக அந்த Mobile Number யைப் பயன்படுத்தியிருந்தால், அதனை நாம் Verification செய்யப் பயன்படுத்த முடியாது. அதே நேரம் சில வேளை அந்த Mobile Number யை வைத்து அவரின் பேஸ்புக் கணக்கைக் கூடத் திறக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க எப்போதும் பழைய, பாவித்த Mobile Number களை வாங்க வேண்டாம். SIM வாங்கும் போது அது Recycle செய்யப்பட்ட SIM மா? அல்லது புதிய SIM மா? என்பதைக் கேட்டு வாங்கவும்.

குறிப்பு: நீங்கள் உங்களிடம் உள்ள ஒரு Mobile Number யைப் பாவிப்பதை நிறுத்துவதாயின் அதனை கழட்டி உடைத்தெறிவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புபட்ட உங்கள் சமூக வலைத்தளக் கணக்குகளை அதன் தொடர்பில் இருந்து நீக்க மறக்க வேண்டாம். அதே நேரம் Proper ஆக அதனை Deactivate செய்யவும். SIM யைக் கழட்டி தெருவில் வீச வேண்டாம். கண்டெடுத்தவர் அதனைத் தவறாகப் பாவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.